எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றுவோர் மற்றும் அவர்களின் கல்வித்தகுதி குறித்த விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை இயக்குனருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ரத்த வங்கிகளை கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றுவோர் மற்றும் அவர்களின் கல்வித்தகுதி குறித்த விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை வரும் பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Discussion about this post