தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதி செய்யும் 324வது சட்டப் பிரிவு – ஒரு பார்வை

மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தை அம்மாநில அரசு கட்டுப்படுத்தத் தவறியதால் சுதந்திரமான, நியாயமான அமைதியான தேர்தலை நடத்துவதை உறுதி செய்யும் வகையில் அங்கு 324ஆவது சட்டப் பிரிவு தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்படுள்ளது.

324-வது சட்டப்பிரிவு என்றால் என்ன? 

இந்திய வரலாற்றில் 324ஆவது சட்டப்பிரிவு அமல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இந்தப் பிரிவு அமல்படுத்தப்படும் போது அது தேர்தல் ஆணையத்திற்கு பல அதிகாரங்கள் கிடைக்க வழிவகை செய்கிறது. இதன் மூலம் தேர்தல் மேற்பார்வை,தேர்தல் கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டும் அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு முழுமையாக வழங்கப்படுகின்றன. இதனால் தேர்தலை நல்ல முறையில் நடத்த எந்த அதிரடி நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுக்க முடியும்.

இந்த விதி அமலுக்கு வந்த பின் குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். அதன்படி இன்று இரவு 10 மணிக்கு மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறுத்தப்பட இருக்கிறது. முன்னதாக நாளை மாலைதான் அங்கு பிரசாரம் முடிக்கப்பட இருந்தது.

இன்று இரவுக்கு மேல் அங்குள்ள கட்சிகள் தேர்தல் பேச்சுகள், பேட்டிகள், விளம்பரங்கள், விழாக்கள் எதிலும் ஈடுபட முடியாது. தேர்தல் விதிமுறைகள் கடுமைப்படுத்தப்படுவதால் இன்று மாலைக்கு மேல் அங்கு மது விற்பனையும் தடை செய்யப்படுகிறது.

மேலும் 324ஆவது சட்டப்பிரிவு அமலில் உள்ள குறிப்பிட்ட காலத்திற்கு தேர்தல் ஆணையம் எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். யாரை வேண்டுமானாலும் உடனடியாக பணி இட மாற்றமும் செய்ய முடியும்.

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கையானது தேர்தலின் போது, கடைசி நேரத்தில் வன்முறையைத் தூண்டி வெற்றி பெறலாம் என நினைத்த திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு கிடைத்த மரண அடியாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

Exit mobile version