விவசாயத்துக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியம் கரையாம்பாளையம் கிராமத்தில் இந்தப் பணிகள் அவர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் கூடுதலாக தண்ணீரை சேமிக்க முடியும். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு விவசாயத்திற்கென்று அதிக அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்தும், அதிக முக்கியத்துவம் அளித்தும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார். குடிமராமத்து திட்டத்தின் மூலம் வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வருமானத்தை பெருக்கிக் கொள்வதோடு, மழைநீர் சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.