வேலூர் மக்களவை தேர்தலில், துரோகத்தின் சின்னமான திமுகவை வீழ்த்தி, அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்காளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாக்காளர்களை விலைக்கு வாங்க திமுக அப்பட்டமாக முயற்சி செய்து கையும், களவுமாக மாட்டிக் கொண்டதால், தற்போது வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதாக அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
யார் வெற்றி பெற்றால் வேலூர் தொகுதிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் நன்மை கிடைக்கும் என்பதை சிந்தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என அறிக்கையில் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுகவும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் தமிழ்நாட்டின் நலனுக்காக எந்த ஒரு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் செய்யவில்லை என்பதை சுட்டிக் காட்டி உள்ள அவர், இஸ்லாமிய மக்களுக்கு திமுக செய்த துரோகங்கள் எண்ணில் அடங்காதவை என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற செய்தால், தொகுதிக்கு தேவையான அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தலில், துரோகத்தின் சின்னமான திமுகவை வீழ்த்தி, அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்காளர்களை ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோல், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என வேலூர் தொகுதி வாக்காளர்களை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். சிறந்த கல்வியாளர் என்ற அடிப்படையில் வேலூர் தொகுதி மக்களுக்கு ஏ.சி.சண்முகம் சிறப்பாக பணியாற்றுவார் என அறிக்கையில் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுடன் இணக்கமான நல்லுறவு வைத்திருப்பதால், தொழில் வளத்தில் வேலூர் தொகுதியை முன்னேற்றமடைய செய்வார் என சரத்குமார் தெரிவித்துள்ளார். நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை திமுக ஏமாற்றி வருவதாக அறிக்கையில் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.