கடும் குளிரை சமாளிக்க உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு பிரத்யேக உணவுப் பொருட்கள்

குளிர் அதிகமாக காணப்படுவதால் கோவை வன உயிரியல் பூங்காவில் குளிரை சமாளிக்கும் விதமாக அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு பிரத்யேக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. கோவை உயிரியல் பூங்காவிலும் நிலவும் கடும் குளிரால் அங்குள்ள பறவைகள், விலங்குகள் சிரமப்பட்டு வருகின்றன. இதை சமாளிப்பதற்காக பிரத்தியேகமான உணவுகள் மற்றும் மருந்துகளை உயிரியல் பூங்கா நிர்வாகித்தினர் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு வழங்கி வருகின்றனர். நீர் சத்து கொண்ட உணவுப் பொருட்களை தவிர்த்து புரதசத்து கொண்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக உயிரியல் பூங்கா மருத்துவர் செந்தில்நாதன் தெரிவித்தார்.

Exit mobile version