கோவை வனக்கோட்டத்திற்கு வந்து செல்லும் வெளிநாட்டு பறவைகள்

கோவை மாவட்டத்திலுள்ள வனக்கோட்டத்தில் நடத்திய கணக்கெடுப்பில் 211 வகையான பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 16ம் தேதி கோவை மாவட்டத்தில் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு முடிந்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வகையான பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது. 12 தண்ணீர் பறவைகள், 16 கழுகுகள், 7 ஆந்தைகள், நமது நாட்டின் 176 பறவைகள் என 211 வகையான பறவைகள் இருப்பது கணடறியப்பட்டுள்ளதாக மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் தெரிவித்தார். ரஷ்யா, நைஜீரியா மற்றும் வடதுருவத்தை சேர்ந்த 21 வகையான பறவைகள் செப்டம்பர் மாதத்தில் கோவைக்கு இடப்பெயர்ச்சி செய்து மீண்டும், மார்ச் மாதம் தனது நாட்டிற்குச் சென்று விடுவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version