அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிதி வழங்க அனைத்து மாநில முதலமைச்சர்களும் முன்வர வேண்டும் என ராமஜென்ம பூமியின் அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ் மகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வகையில், கோபால் தாஸ் மகராஜ் தலைமையில் புதிய அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமர் கோயில் கட்டுவதற்காக அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்றும், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் நிதியால்தான் கோயில் கட்டப்பட உள்ளதாகவும் கூறினார். ராமர் கோயில் விவகாரத்தில் அரசு பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாகவும், மேற்கொண்டு அரசை தொந்தரவு செய்ய விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ராமர் கோயில் கட்டுவதற்கு விருப்பமுள்ள மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் உதவ வேண்டும் எனவும் கோபால் தாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.