எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 2 லட்சம் குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை

வரும் கல்வியாண்டில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 2 லட்சம் குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க அரசு பல்வேறு திறன் பயிற்சிகளை அளித்து வருவதாக கூறினார். மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு 28 ஆயிரத்து 759 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டிய அமைச்சர் செங்கோட்டையன், வரும் கல்வியாண்டில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை நடைபெற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version