டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு: ஓம் காந்தன் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான ஓம் காந்தனின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால், அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் சரணடைந்த முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் நடைபெற்ற விசாரணையில், இதுவரை 23 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதற்காக சுமார் 4 கோடி ரூபாய் பணம் பெற்றது தெரியவந்துள்ளது.

அதேபோல், மற்றொரு முக்கிய குற்றவாளியான ஓம் காந்தனின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிய உள்ள நிலையில், ஓம் காந்தனையும், ஜெயகுமாரையும் முறைகேடு நடைபெற்ற தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு அழைத்து சென்று, முறைகேட்டில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்து இருவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் நடிக்க வைத்து, வாக்குமூலத்தை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று ஒம் காந்தனின் நீதிமன்றக் காவல் முடிவடைவதால் அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

Exit mobile version