டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் 3 பேரிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் 3 பேரிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குரூப் – 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தேர்வு நடத்தப்படும் விதம், முறைகேடுகள் அரங்கேறுவதற்கான வாய்ப்பு ஆகியவை குறித்து டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம், சிபிசிஐடி போலீசார் கேட்டறிந்தனர். இதற்கிடையே குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய முகப்பேர் பகுதியை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version