டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 3 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் சென்னை ஆயுதபடை காவலர் சித்தாண்டி என்பவர் சுமார் 82 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு 7 பேரை தேர்ச்சி பெற வைத்துள்ளார். அதேபோல், 2019 ஆம் ஆண்டில், 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு 5 பேரை தேர்ச்சி பெற வைத்துள்ளார். மற்றொரு ஆயுதப்படை காவலரான பூபதி என்பவர் 55 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு 5 பேரை தேர்ச்சி பெற வைத்துள்ளார். இதற்காக முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் என்பவரிடம் பணம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், கார்த்திக் என்பவரும் ஜெயக்குமாரிடம் பணம் கொடுத்து தற்போது பணியில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, சித்தாண்டி, பூபதி மற்றும் கார்த்திக் ஆகியோரை கைது செய்த குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.