எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பதிவில் குரூப் 4 தேர்வர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு திமுக அரசிற்கு சில வலியுறுத்தல்களை கூறியுள்ளார். அவரது டிவிட்டர் பதிவு பின்வருமாறு உள்ளது.
2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொகுதி-4 காலிப்பணியிடங்களுக்காக,
நடைபெற்ற TNPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023ல் வெளியானது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை.
இந்நிலையில்,TNPSC தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே 2022ம் ஆண்டு தொகுதி -4க்காக நடைபெற்ற TNPSC தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள 20000 பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
TNPSC தொகுதி -4க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது , இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள் ,
ஆகவே விரைந்து தொகுதி -4க்காண காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொகுதி-4 காலிப்பணியிடங்களுக்காக,
நடைபெற்ற TNPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023ல் வெளியானது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை.இந்நிலையில்,TNPSC தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே…
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) June 7, 2023