டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு விசாரணை தீவிரம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக மூன்றாம் நாளான இன்றும்  விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் ஒரு இடைத்தரகரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குரூப் 1 மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் இடைத்
தரகர்களாக செயல்பட்டவர்களே, குரூப் 4 தேர்வு முறைகேட்டுக்கும் மூளையாக
செயல்பட்டது தெரியவந்துள்ளது. ஏற்கனவே, டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் இடைத்தரகர்களாக இருந்து கைது செய்யப்பட்டவர்கள், புதிய இடைத்தரகர்களை உருவாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிபிசிஐடி காவல்துறையினர், குரூப் 4 முறைகேட்டில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர்கள் 4 பேரிடம், பணம் கொடுத்த தேர்வர்கள் பட்டியலை தயாரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதில் முறைகேடாக தேர்வு எழுதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 99 பேரை தவிர, மேலும் பலரும் பணம் கொடுத்து தேர்ச்சி பெற முயன்றது தெரிய வந்துள்ளது. விசாரணைக்கு உட்படுத்தபட்ட தேர்வர்களை தாண்டி, நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வர்கள் தலைமறைவாகி இருப்பதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஓம்காந்தன் என்ற இடைத்தரகரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Exit mobile version