டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டனர்.
குரூப் – 4 தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி ஊழியர், கூரியர் நிறுவன ஊழியர் உட்பட 3 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இம்முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே,தலைமறைவாக உள்ள முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் இல்லத்தில், சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.