டி.என்.பி.எஸ்.சி குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு : இருவர் சிறையில் அடைப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர், சிறையில் அடைக்கப்பட்டனர்.

குரூப் -4 தேர்வில் முறைகேடு நடைபெற்ற நிலையில், 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2-ஏ தேர்விலும் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 42 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வரும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணூரை சேர்ந்த சித்தாண்டி, குரூப் 2-ஏ தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. 

இதுதொடர்பாக காரைக்குடி பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன், நெல்லை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஜெயராணி ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், குற்றவியல் நீதிபதி ராஜகுமார் முன்பு ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version