டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பாக, மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.
2017ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில், 42 தேர்வர்கள் முறைகேடு செய்ததாக டி.என்.பி.எஸ்.சி. புகார் அளித்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், சிவகங்கை மாவட்டம் அண்ணாமலைநகரைச் சேர்ந்த வேல்முருகன், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஜெயராணி ஆகியொரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை குரூப் 4 தேர்வில் 16 பேரும், குரூப் 2 ஏ தேர்வில் 2 பேரும் கைது செய்யப்பட்டு காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் மற்றும் சித்தாண்டி ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.