தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன், நவம்பர் 11 ம் தேதி நடக்கவுள்ள குரூப்-2 தேர்வினை 6 லட்சத்து 26 ஆயிரம் பேர் எழுதவுள்ளதாகவும் இதற்காக 2 ஆயிரத்து 268 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குரூப்-4 தேர்வினை எழுதிய 31 ஆயிரத்து 424 பேரின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.இதற்கான கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடத்தப்படும் எனவும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்தார்.

 

Exit mobile version