5 மாதங்களுக்குப் பின் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 5 மாதங்களாக மூடப்படடிருந்த சுற்றுலா தலங்களுக்கும், அனுமதியளித்துள்ளதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகையில், அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் அனைத்து சுற்றுலா தலங்களும் செயல்பட அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து, உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டன, ஒலி பெருக்கி மூலம் முகக்கவசம் அணிதல், பாதுகாப்பு இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்கு முகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது,

சூரிய உதய காட்சிகள், பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை காட்சிகளை பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம் உட்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவந்த வண்ணம் உள்ளனர்.

 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் கோயில் திறப்புக்கப்பட்டு பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, ராமநாதபுரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்த கிணறுகளில் நீராட தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடல் மற்றம் நாழிகிணற்றில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் புனித நீராடினர்.

அனைத்து கோயில்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கடலில் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version