நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி

நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்க, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் புதிதாக பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட கலைஞர்களுக்கு, தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆயிரத்து 810 கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம், ஒரு கோடியே 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி, அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணத் தொகையாக இரண்டு முறை தலா ஆயிரம் ரூபாய் நிதியை, அரசு வழங்கிய நிலையில், புதிதாக வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கும் நிதியுதவி வழங்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதனடிப்படையில், தற்போது புதிதாக பதிவு செய்த கலைஞர்களுக்கும் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version