தியாகராயர் நகரில் இறுதிக்கட்ட விற்பனை களை கட்டியுள்ளது – மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளதால் பாதுகாப்பு பணி தீவிரம்

நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ளநிலையில், சென்னை தியாகராயர் நகரில் இறுதிக்கட்ட விற்பனை களை கட்டியுள்ளது.
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்க, சென்னை தியாகராய நகருக்கு மக்கள் அதிகளவில் கூடுவது வழக்கமாக உள்ளது.

இந்தநிலையில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக தியாகராயர் நகரில் மக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், ஆடை மற்றும் அலங்காரப் பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக, தியாகராயர் நகர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version