தமிழக ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று, ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தைச் சந்தித்துப் பேசினார். சுமார் அரைமணி நேரம் இருவரும் பேசினர். முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி ஆகியோரும் சென்றிருந்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறப்படுகிறது.

Exit mobile version