தமிழகத்தில் சென்னையை தவிர்த்து 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.
கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு நோயின் தீவிரத்தை குறைக்க ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மையம் அமைத்து ரெம்டெசிவிர் மருந்து விற்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு மேலாக ரெம்டெசிவிர் மருந்தை வாங்க கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூட்டம் அலைமோதுகிறது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வந்தன.
அதன்படி தற்போது 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடகங்ப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன் அறிவித்தபடி மதுரை அரசு மருத்துவமனையில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது