ஜாக்டோ ஜியோ போராட்டம் : தமிழக அரசின் எச்சரிக்கையும், விளக்கமும்…

பணிக்கு திரும்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

5 ஆயிரம் அரசுப் பள்ளிகளை மூடுவதாகவும், 3 ஆயிரத்து 500 அரசுப் பள்ளிகளை இணைப்பதாகவும் தவறான தகவலை சிலர் மக்களிடையே பரப்புவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சங்கங்கள் நடத்த வேண்டும் என்பதற்காகவும் தங்களின் பிரச்சனைகளை அரசியல் படுத்துவதற்காகவும் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் சிலர் தூண்டிவிட்டு தவறாக வழி நடத்துவதாக சுட்டிக் காட்டியிருக்கும் தமிழக அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் மக்கள் நல திட்டங்களுக்கு நிதி இல்லாமல் போவதுடன், அரசு வசூலிக்கும் வரியுடன் கடன் பெற்று சம்பளமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டிய சூழல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்காக அரசு இயங்க வேண்டுமே தவிர அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்குவதற்காக மட்டுமே இயங்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என அரசு அறிவித்துள்ளது.

நடைமுறைக்கு சாத்தியப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கும் தமிழக அரசு, பணிக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

Exit mobile version