தமிழக அரசின் பேச்சை கேட்டு வந்து ஏமாந்த பொதுமக்கள்

சேலம் மாவட்டத்தில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய நிலையில், முகாம் ஒன்றில் தடுப்பூசிகள் இல்லை என்ற தகவல் பலகை வைக்கப்பட்டதால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

குமாரசாமிபட்டி அரசு நகர்புற சமுதாய சுகாதார நிலையத்தில், ஏராளான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த பாதுகாப்பு இடைவெளியின்றி கூடியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் ஸ்ரீ சாரதா பாலமந்திர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக ஏராளமான இளைஞர்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றனர். அப்போது, குறைவான நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என தகவல் பலகை வைக்கப்பட்டது. மாவட்டத்தில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், தடுப்பூசி இருப்பில் இல்லை என தகவல் பலகை வைக்கப்பட்டதால், குழப்பத்தில் ஆழ்ந்த பொதுமக்கள், பொய் கூறிய அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கடுமையாக சாடினர்.

Exit mobile version