போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பத்தை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால், காற்று மாசுபாடு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, 13 மாநகராட்சிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, காற்றின் துகள்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, போகி அன்று எரிக்கப்பட்ட பொருட்களால் ஏற்பட்ட புகை காரணமாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, போகிப்பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிப்பத்தை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.