தற்போது, உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிராமணப் பத்திரத்தில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதால், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதிலும் கால தாமதம் ஏற்படும் சூழல் உறுவாகியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, மக்களவை தேர்தலுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெறும் என கூறியுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலை அளிக்க தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாக்காளர் பட்டியலை சரிபார்த்த பிறகு, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version