ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்துக்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தை கடந்த 3ம் தேதி ஃபானி புயல் புரட்டிப் போட்டது. இதில் உயிர் சேதமும், ஏராளமான பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. ஃபானி புயல் காரணமாக ஒடிசா மாநிலமே உருகுலைந்து போயுள்ளது. மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் சீரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஃபானி புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் இரங்கலை தெரிவித்துகொள்வதாக கூறியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.