புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 6 மாதங்களில் இலவச வீட்டுமனைப் பட்டா – தமிழக அரசு

புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 6 மாதங்களில் 3 சென்ட் இலவச வீட்டு மனைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் ஆணையில், நீர்நிலை, மேய்க்கால் மற்றும் சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அப்புறப்படுத்த குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மக்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து பயனாளிகளின் தகுதியின் அடிப்படையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களை அப்புறப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கும் தமிழக அரசு, மேய்க்கால் மற்றும் சாலை போன்ற மற்ற ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தவும் ஆணையிட்டுள்ளது. இந்த திட்டம் 6 மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version