தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ம் தேதி, அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு தரப்புகளிலிருந்து எழுந்த கோரிக்கையால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீபாவளி தினமான நவம்பர் 6-ம் தேதி, செவ்வாய் கிழமை என்பதால், வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு ஏதுவாக, 5-ம் தேதியான திங்கட்கிழமை, விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், இரண்டாவது சனிக்கிழமையான நவம்பர் 10-ம் தேதி, வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.