குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு கூட்டம் சென்னை செனாய் நகரில் நடைபெற்றது. கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் வளர்மதி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் முறை களத்தில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு சாதனை புரிந்த இளம் சாதனையாளர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிலோபர் கபில், தமிழகத்தில் வெளிமாநில குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுவதாக கூறினார். குழந்தைகளை வைத்து தொழில் செய்யும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிலோபர் கபில் தெரிவித்தார்.