தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகள் குறைத்து காட்டப்படுவதாக குற்றச்சாட்டு

தமிழகத்தில் 6 மாவட்ட அரசு மருத்துவமனைகளில், கொரோனா இறப்புகள் குறைத்து காட்டப்படுவதாக, அறப்போர் இயக்கம் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2 மாதத்தில் மட்டும், சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அறப்போர் இயக்கம் சார்பில் மேற்கொண்ட ஆய்வின் படி, கோவை, மதுரை, திருச்சி, கரூர், திருப்பூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில், அரசு கணக்கீட்டின்படி, ஏப்ரல்-மே மாதத்தில், 863 பேர் மட்டுமே கொரோனாவால் இறந்துள்ளாதாக தெரிவித்துள்ளனர். ஆனால், ஏப்ரல் மே மாதங்களில், இந்த 6 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 700 என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக ஒரு மாவட்டத்தில் 7ஆயிரத்து 500 முதல் 8 ஆயிரத்து 500 வரை கொரோனா மரணங்கள் குறைத்து காட்டப்படுவதாக, அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. 8 முதல் 10 சதவீத இறப்புகளை அரசு குறைத்து காட்டுவது தெரிய வந்துள்ளது. இதன்மூலம், தமிழகம் முழுவதும் ஏப்ரல்-மே மாதங்களில், 12 ஆயிரத்து 500 பேர் இறந்துள்ளதாக அரசு அறிக்கை தெரிவித்துள்ள நிலையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் நேர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை தெளிவுப்படுத்துகிறது. உண்மை நிலவரத்தை அரசு ஒப்புக்கொண்டால் தான், அதனை சரிசெய்ய முடியும் என்றும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது

Exit mobile version