நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வி துறை சில வாய்மொழி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மே 5ஆம் தேதி, நாடு முழுவதும், நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தமிழக மாணவர்கள் குழப்பம் இன்றி தேர்வு எழுத அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் பள்ளிக்கல்வி துறை, மாணவர்களுக்காக வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களில், அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள Centre Code, Centre Address சரியாக உள்ளதா என்பதை தேர்வுக்கு முன்பே சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், மே 3ஆம் தேதியுடன் அனுமதி அட்டை பிழைகளை சரி செய்வதற்கான அவகாசம் முடிவடைவதால், ஹால் டிக்கெட்டோடு, தேர்வு மையத்துக்கு நேரில் சென்று ஒரு முறை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தங்களின் அனுமதி அட்டையில் ஏதேனும் குழப்பம் இருந்தால் உடனடியாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை அணுக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.