2020-21 ஆண்டிற்கான பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு 2,716 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நிர்பயா நிதியின் மூலம் 75.02 கோடி ரூபாய் செலவில் அனைத்து அரசு பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2213 புதிய பேருந்துகளை வாங்க ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடம் முதற்கட்ட நிதியுதவி பெறுவதற்கான திட்டம் ஒப்பந்தமான நிலையில், இதற்கென பட்ஜெட்டில் 960 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வினால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை ஈடு செய்ய 298 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாதாவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் மாதாவரம் முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான 52.01 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.