தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து குறைவு

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்த நிலையில், பாசனத்துக்கான 22 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 25 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. ஒகேனகல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 64வது நாளாக அருவியில் குளிக்கவும், 7வது நாளாக பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version