ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, அஸ்ஸாம் மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மீசல் கிராமத்தைச் சேர்ந்த போஸ் – சுந்தரி தம்பதியினரின் மகனான சுரேஷ் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பணிக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அஸ்ஸாம் மற்றும் சென்னையில் அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் அவரது உடல் சொந்த ஊரான மீசல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசு சார்பில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் முருகேசன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்த ராணுவ வீரர்க்கு மனைவி ஜெயராணி, மகள் தனன்யா, மகன் கோவர்த்தனன் ஆகியோர் உள்ளனர்.