கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவை, போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 வரை பார்சல் சேவைக்கு அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி
வரையிலும் பார்சல் சேவைக்கு அனுமதிக்கப்படுகிறது.
Swiggy, Zomato போன்ற மின் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தில் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து பணியாற்றலாம் எனவும், தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கிலும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு
* மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்
* ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், திரையரங்குகள்…
வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்படாது என அறிவிப்பு
* பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், மருத்துவமனை, மருந்தகங்கள் செயல்பட அனுமதி
* ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவை, போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி
* சரக்கு வாகனங்கள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு முழு ஊரடங்கின்போது அனுமதி
* உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 வரை; நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும்…
மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி
* Swiggy, Zomato போன்ற மின் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தில் மட்டும் செயல்பட அனுமதி
* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து பணியாற்றலாம்
* தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி