முழுவீச்சில் நடைபெறும் நிவாரணப்பணிகள், சில கட்சிகள் தேவையற்று அரசியல் செய்கின்றன – அமைச்சர் தங்கமணி

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் சில அரசியல் கட்சிகள் மட்டும் தேவையற்ற விமர்சனம் செய்வதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாகை சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடத்தை அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி,பெஞ்சமின் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியும் உடனிருந்தார்.

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவுகள் அந்தந்த மையங்களில் தயாரிக்கப்பட்டாலும் நாகை ஒருங்கிணைந்த மையத்தில் தயாராகும் உணவு மாவட்டம் முழுவதும் அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக தயாரித்து அனுப்பப்படுகிறதா என்பதை அமைச்சர்கள் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். உணவு தயாரிப்பதற்காக வாங்கப்பட்ட காய்கறி,அரிசி போன்றவையும் தரமாக இருக்கிறதா எனவும் அவர்கள் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கஜா புயல் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சில அரசியல் கட்சிகள் தேவையற்று அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

 

 

 

 

Exit mobile version