கஜா புயல் பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் தாக்குதலால் 10 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தமிழக அரசு சார்பில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எந்தெந்த துறைக்கு எவ்வளவு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பயிர் சேதத்திற்கு 350 கோடி ரூபாயும், மின் துறைக்கு 200 கோடி ரூபாயும், உயிரிழப்பு மற்றும் உடைமகள் இழப்புக்கு 205 கோடியே 87 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வீடுகள் சேதத்திற்கு 100 கோடி ரூபாயும், உள்கட்டமைப்புக்கு 102 கோடியே 50 லட்சம் ரூபாயும், மீன்வளத்துறைக்கு 41 கோடியே 63 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.