DGP டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குட்கா விவகாரத்தில் ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து பணி நீட்டிப்பு பெற்றதாக டி.கே.ராஜேந்திரன் மீது கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஜிபி ராஜேந்திரன் மீதான புகார் தொடர்பாக எந்த ஆவணங்களும் இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பணி நீட்டிப்பை ரத்துச் செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், குட்கா விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்ததாக தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version