கருணை அடிப்படையில் பணிநியமனம் பரம்பரை உரிமையல்ல : உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை

கருணை அடிப்படையில் பணிநியமனம் என்பது பரம்பரை உரிமையல்ல என்று உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவு ஒன்றினைப் பிறப்பித்துள்ளது. அதன் சாராம்சத்தினை பின்வருமாறு காண்போம். திருச்சியினைச் சேர்ந்த யோகமலர் என்பவர் சார்பதிவாளராக இருந்து வந்தார். அவர் 2020 ஆம் ஆண்டில் இயற்கை எய்தியனார். இதனால் அவரது மகன வினோத்கண்ணா கருணை அடிப்படையில் அந்த அரசுப் பணியினை தனக்கு தருமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.இப்படியே போனால், இளைஞர்களால் வாழ முடியாது” - மதுரை உயர்நீதிமன்றம்...

இதனை எதிர்த்து வினோதாகண்ணாவின் சகோதரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.  வினோத்கண்ணாவிற்கு சொந்த வீடுகள், நிலம் உள்ளது, மேலும் அவர் தாயாரை சார்ந்திருக்க வில்லை  என்று மகாலட்சுமி தரப்பு வாதிட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் ‘கருணை அடிப்படையில் பணிநியமனம் என்பது பணியின்போது இறக்கும் ஒருவரின் பரம்பரை உரிமைக் கிடையாது. அரசின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே அரசின் கருணை அடிப்படையிலான பணி நியமன உரிமையைப் பெற முடியும். யாரும் இதற்கு உரிமைக்கோர முடியாது” என்று கூறி மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Exit mobile version