கடந்த ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்குகின்றன. 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒருவார காலமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. ஆசிரியர்களின் இந்த நடவடிக்கையால் மாணவர்களின் கல்வி பாதிப்படைவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்ததை ஏற்று, ஆசிரியர்கள், பணிக்கு திரும்பினர். இதையடுத்து பள்ளிகள் வழக்கம்போல இயங்குகின்றன. தங்களது கோரிக்கைகளை முதலமைச்சர் கட்டாயம் நிறைவேற்றுவார் என்று ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.