திருவாரூர் இடைத்தேர்தல் : வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சியினர் தீவிரம்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, வேட்பாளர் தேர்வு, பிரசாரங்களில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து, காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க விரும்புபவர்கள், வரும் 2ஆம் தேதி காலை 9.30 மணி முதல், 3ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவித்துள்ளது. விண்ணப்பக் கட்டணத் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, வரும் 3ஆம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை 4ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, திருவாரூர் தொகுதிக்கான வேட்பாளர் தேர்வு, பிரசாரங்களில் அரசியல் கட்சியினர் தீவிரம்காட்டி வருகின்றனர்.

Exit mobile version