திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோபுரங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் வண்ணமயமாய் காட்சி அளிப்பதுடன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வரும் டிசம்பர் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 10 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்நிலையில் கோயிலைச் சுற்றி அலங்கார மின் விளக்குகள், கோயிலின் கோபுரங்கள் ஆகியவை வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் வண்ணமயமாய் காட்சியளித்து வருகிறது. தீபத்திருவிழா நெருங்குவதையொட்டி மகளிர் சுய உதவிக்குழு விற்பனை கண்காட்சி, கைத்தறி நெசவு கண்காட்சி ஆகியவைகளுடன் திருவண்ணாமலை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.