திருவண்ணாமலை மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்தும் பணிகள் நிறைவு

திருவண்ணாமலையில் 6 கோடி ரூபாய் செலவில் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட விளையாட்டு அரங்கு, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.

தமிழக அரசு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு இடங்களில் உள்ள விளையாட்டு அரங்குகளை சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள உள்விளையாட்டு அரங்கை சர்வதேச அளவில் மாற்றி அமைக்கும் பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது.

இப்பணிக்கு அரசு, ரூபாய் 4 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தது. அதேபோல் இரவு நேரங்களிலும் போட்டிகள் நடத்த வசதியாக ஒரு கோடியே 50 லட்சம் செலவில் நான்கு திசைகளிலும் உயர்மின் விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் விளையாட்டு ஓடுதளம் மாற்றி அமைக்கப்பட்டதன் மூலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பயன்பெறுவார்கள். இந்த விளையாட்டு அரங்கம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதால், விளையாட்டு வீரர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version