கார்த்திகை திருநாளையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை மகாதீபம்

கார்த்திகை திருநாளையொட்டி திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் நாளை மாலை ஏற்றப்படுகிறது.

அதையொட்டி நாளை அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சாமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும். பக்கதர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு பணிக்கு 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா குட்டி விமானம் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்பட உள்ளது.

Exit mobile version