திருவள்ளூர் அடர் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா

அடர் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் விழா திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், ஆயிரம் சதுர அடியில் 105 மரக்கன்றுகளை நட ஏற்பாடு செய்திருப்பதாகவும், பள்ளி, கல்லூரிகளில் மரங்களை நட என்.ஜி.ஓ.க்கள் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டு மரம், புங்கை மரம், அத்தி மரம் உள்ளிட்ட மரங்கள் நடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பி தில்லை நடராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version