பொதுத்தேர்வில் 98.53% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்

வெளியிடப்பட்டுள்ள 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 98 புள்ளி 53 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 98 புள்ளி 48 சதவீத தேர்ச்சியுடன் இராமநாதபுரம் மாவட்டம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. இதேபோல், 98 புள்ளி 45 சதவீத தேர்ச்சியுடன், நாமக்கல் மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்கள் 98 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் 98 புள்ளி 01 சதவீத மாணவ- மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Exit mobile version