நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு திருப்பூர் பாஜக சார்பில் காவி வேட்டி அனுப்பி வைக்கப்பட்டது
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் வெற்றி பெற்றால் அனைவரும் காவி வேட்டி கட்டிக் கொண்டு தான் அலைய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக உள்ளதால், எஸ் ஏ சந்திரசேகருக்காக திருப்பூர் பாஜகவினர் காவி வேட்டியை அனுப்பி வைத்தனர். மேலும் இது முதல் தவணை என்று குறிப்பிட்டுள்ள அவர்கள் இனி வரும் காலங்களில் எஸ் ஏ சந்திரசேகருக்கு தொடர்ச்சியாக காவி வேட்டி அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர்.