திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.
முன்னதாக, சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர் பின்னர் கார் மூலம் திருப்பூர் வந்தடைந்தார். அவரைத் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து தன் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கினார். தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். இந்த பிரசாரக் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.