திருப்பூர் ரயில் நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால் ரயிலுக்கு காத்திருக்கும் பயணிகள் அவதி

திருப்பூர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கைகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

திருப்பூர் நகரம் டாலர் சிட்டி என வர்ணிக்கப்படுகிறது.தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து இங்கு வேலை தேடி வருகின்றனர். நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் திருப்பூர் மாநகர் மக்கள் தொலைதூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தை அதிகம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் ரயில்நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கைகள் இல்லாததால் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் நடைமேடையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. நடைமேடையில் பயணிகள் அமர்வதால நடப்பவர்களுக்கு இடையூறும் ஏற்படுகிறது. எனவே ரயில் பயணிகளுக்கு இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும் என்று ரயில்வே துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

Exit mobile version